கிரிக்கெட் (Cricket)

கடைசி லீக் ஆட்டம்: 104 ரன்களில் சுருண்ட ஓமன்.. ஆஸ்திரேலியா அபாரம்
- 40வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஓமன் அணிகள் மோதி வருகின்றன.
- 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
20 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் இன்றுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது.
இன்றைய 40வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஓமன் அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ய ஓமன் பேட்டிங் இறங்கியது. ஆஸ்திரேலியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஓமன் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.
16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஓமன் அணி மொத்தமே 104 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து 105 என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரலியா பேட்டிங் ஆடி வருகிறது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஜாம்பா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஓமன் தரப்பில் வாசிம் அலி அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார்.
Next Story





