ஒரு நாளைக்கு நான்கு கேரட் சாப்பிட்டால், ஞாபக சக்தி, சூப்பராக இருக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இதுகுறித்து அமெரிக்க நிபுணர்கள் கடந்த சில ஆண்டுகளில், "பீடா கரோடின்" சத்துள்ள மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்த 4,500 பேரிடம், ஆன்லைனில் சர்வே செய்துள்ளார்கள்.
அவர்கள் இதை சாப்பிட்டு வருவதால், என்ன பலன் கிடைத்துள்ளது என்று கேட்டதற்கு, நினைவாற்றல் துல்லியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, பெண்களை விட, ஆண்களுக்கு, “பீடா கரோடின்" சத்துக்களால், வயதான காலத்தில் மறதி நோய் வருவதில்லை என்று, நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டு நாளுக்கு ஒரு முறை, 50 மில்லிகிராம் "பீடா கரோடின்” அல்லது, ஒரு நாளைக்கு நான்கு கேரட்டை அப்படியே சாப்பிட்டு வந்தாலே, நினைவாற்றல் சூப்பராக இருக்குமாம்.