பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் ஆமீர் கான். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திரையுலகில் கவனம் செலுத்தி வரும் ஆமீர் கான் 'சித்தாரே ஜமீன் பர்' படத்தில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஆமீர் கான் நடிக்க இருக்கும் புதிய படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், ஆமீர் கான் தமிழில் வெளியாகி, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற கஜினி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக கஜினி பட தயாரிப்பாளர்களான அல்லு அரவிந்த் மற்றும் மது மந்தெனாவிடம் பேசிய ஆமீர் கான், படத்தின் கருவை தெரிவித்ததாக கூறப்படுகிறது.