தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை' படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து 'ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார்.
அதே மே 1 ஆம் தேதி சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
ஹிட் 3 படத்தின் சென்னை ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நானியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் "ஒரே நாளில் உங்கள் திரைப்படமும் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படமும் வருகிறது அதனை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்? " என கேள்வி எழுப்பினார்.
அதற்கு நானி " இது போட்டி என்று சொல்ல கூடாது. பார்ட்டி என்று சொல்ல வேண்டும். தமிழ் மக்கள் கண்டிப்பாக முதலில் சூர்யா சாரின் ரெட்ரோ திரைப்படத்தை பார்ப்பார்கள். அதை பார்த்துவிட்டு ஹிட் 3 திரைப்படத்தை பார்க்க வேண்டும்.
இரண்டு படங்களையும் கொண்டாட வேண்டும். ரெட்ரோ திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது. அங்கும் திரைப்படம் நன்றாக ஓடும் என நம்புகிறேன்." என கூறினார்.