முருங்கை என்றதும் அதன் காய்களும் கீரைகளும் மட்டுமே நமக்கு தெரியும். அதில் மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்லக்கேட்டு விதம்விதமாய் சமைத்து உண்டு ருசித்து ரசித்திருப்போம்.
ஆனால், முருங்கைப்பூவில் இருக்கும் சத்துகள் மட்டுமல்ல, அதில் இருக்கும் ரகசியங்கள் நம்மில் பலரும் தெரியாத ஒன்று.
இதன் பலன் பற்றி அறிந்ததாலேயே சித்தர்கள் முருங்கையை 'பிரம்ம விருட்சம்' என்று அழைக்கிறார்கள்.
அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக நரம்புகள் செயலிழந்து நரம்புத்தளர்ச்சி ஏற்படும் நேரங்களில் முருங்கைப்பூவை கசாயம் வைத்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத்தளர்ச்சி சரியாகும்.
இதை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
கஷாயம் செய்து பருகுவதன் மூலம் உடல் சூடு தணியும்.
பலருக்கு தாம்பத்ய உறவில் நாட்டம் இருப்பதில்லை. இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் முருங்கைப்பூ ஒரு கைப்பிடி எடுத்து அரைத்துப் பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து குடித்து வந்தால் தாம்பத்ய உறவில் ஆர்வம் ஏற்படும்.
முருங்கைப்பூவை காய வைத்துப் பொடியாக்கி தேனுடன் கலந்து அதே ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும் என்கிறார்கள்.