ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
அவர் சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர்காணலில் வெற்றிமாறன் இயக்கிய திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும். அவருடன் பணியாற்ற ஆசைப்படுகிறேன். அவர் எழுதிய கதை ஒன்றை இன்னும் சில வாரங்களில் கேட்க இருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதனால் வெற்றி மாறன் இயக்கத்தில் அல்லது வெற்றி மாறன் கதையில் ஜெயம் ரவி நடிக்க வாய்ப்புள்ளதாக இந்த தகவல் அமைந்துள்ளது.