என் மலர்

    சினிமா செய்திகள்

    ரீ-ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படம்!
    X

    ரீ-ரிலீஸ் ஆகும் விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்' படம்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆள் கடத்தலை காமெடியான பாணியில் நலன் குமாரசாமி அமைத்த விதம் கல்ட் கிளாசிக்.

    நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியான 'சூது கவ்வும்' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    ஆள் கடத்தலை காமெடியான பாணியில் நலன் குமாரசாமி அமைத்த விதம், டார்க் காமெடி அம்சங்கள் நிறைந்த காட்சிகள் என படம் கல்ட் கிளாசிக் ஆக மாறியது.

    இப்படத்தின் இரண்டாம் பாகம் 'சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களுக்கும்' எம்.எஸ். அர்ஜூன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியானது.

    இந்நிலையில் அணமைக் காலமாக கல்ட் கிளாசிக் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரும் வரிசையில் சூது கவ்வும் முதல் பாகம் ரீ ரிலீஸ் ஆக உள்ளது.

    வரும் 20 ஆம் தேதி "சூது கவ்வும்" ரீ-ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான டிக்கெட் கட்டணம் ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக காதலர் தினத்தை முன்னிட்டு, காதலர் தினம், மௌனம் பேசியதே, மின்னலே, உயிருள்ளவரை உஷா ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×