என் மலர்
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொட்டியம் ஸ்ரீ காளியம்மன் பவனி.
    • தண்டியடிகள் நாயனார் குரு பூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு பங்குனி-3 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : திரயோதசி காலை 8.57 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : சதயம் நாளை காலை 6.08 மணி வரை பிறகு பூரட்டாதி

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று மாத சிவராத்திரி, ரத்தினகிரியில் ஸ்ரீ பாலமுருகனுக்கு தங்கரதக் காட்சி, அபிஷேகம்

    இன்று மாத சிவராத்திரி. தொட்டியம் ஸ்ரீ காளியம்மன் பவனி. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். தண்டியடிகள் நாயனார் குரு பூஜை. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்பூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை.

    ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். வேலூர் ரத்தினகிரியில் ஸ்ரீ பாலமுருகனுக்கு தங்கரதக்காட்சி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விருத்தி

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-நட்பு

    கடகம்-ஓய்வு

    சிம்மம்-லாபம்

    கன்னி-நட்பு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-பக்தி

    தனுசு- வெற்றி

    மகரம்-சோர்வு

    கும்பம்-களிப்பு

    மீனம்-போட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 1,350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.

    மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும். இதையடுத்து 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் நிலையில், துரந்தர்: தி ரிவெஞ்ச் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. மேலும், இந்தப் படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் முன்கூட்டியே தொடங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், துரந்தர் 2 திரைப்படத்தின் ஆரம்பகட்ட முன்பதிவில் இந்தப் படம் ரூ. 28.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் துரந்தர் 2 திரைப்படம் முன்பதிவில் மட்டும் ரூ. 120 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. துரந்தர் 2 திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் நிலையில், துரந்தர் 2 படத்திற்கு 10 லட்சத்திற்கும் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 200 தொகுதிகளில் வெல்வது இலக்கு என்பதை எண்ணி பணியாற்ற வேண்டும்.
    • தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சி பிரச்சனையும் இருக்கக்கூடாது.

    திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் பணியில் திமுக தான் நம்பர் 1 ஆக இருந்து வருகிறது.

    அரசியல் களத்தில் நமது கை ஓங்கி இருக்கிறது. நலத் திட்டங்களால் மக்களிடையே பெருகும் ஆதரவு.

    200 தொகுதிகளில் வெல்வது இலக்கு என்பதை எண்ணி பணியாற்ற வேண்டும்.

    தேர்தல் முடியும் வரை எந்த உட்கட்சி பிரச்சனையும் இருக்கக்கூடாது.

    யாராவது தேவையின்றி கட்சிக்குள் குழப்பமோ பிரச்சனையோ உண்டாக்கினால் அவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை பாயும்.

    வேட்பாளர் தேர்வு, யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.

    தேர்தலில் அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே அமைச்சர் பதவி வழங்கப்படும்.

    தான் மட்டுமின்றி பிறரையும் வெல்ல வைத்து கட்சியின் வெற்றிக்கு உழைப்பவர்களுக்கு உண்டான பரிசு தேர்தலுக்குபின் தேடி வரும்.

    தனிப்பட்ட நிர்வாகிகளை விட கட்சியின் நலன் தான் எனக்கு முக்கியம்.

    உறுதியாக வெற்றி பெறும் ஆற்றல் உள்ளவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும். தான் மட்டுமின்றி பிறரையும் வெல்ல வைத்து கட்சியின் வெற்றிக்கு உழைப்பவர்களுக்கு உண்டான பரிசு தேர்தலுக்குபின் தேடி வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • என்டிஏ வெற்றிப் பெற்றால் விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி?
    • It is reported that negotiations are continuing behind the scenes. திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.23ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாக உள்ளன. இதனையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீட்டு பேச்சில் கவனம் செலுத்தி வருகின்றன.

    திமுக தரப்பில் கூட்டணி இறுதியானது. அதிமுக தரப்பிலும் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியானலும், விஜய்யை என்டிஏ கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் தவெக தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தவெக, என்டிஏ கூட்டணிக்கு சென்றால் பாதிப்பு அவர்களுக்குதான் என திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். தவெக, என்டிஏ கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

    "பாஜகவுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் திமுக தோற்றது. விஜய்க்கும் இதே நிலைதான்" என தெரிவித்துள்ளார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!
    • அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!

    வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்!

    இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்!

    அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!

    இதுதான் தி.மு.க.

    ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் - நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்! திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.

    நேற்று மாலை 4 மணிக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

    மேலும் எம்.எல்.ஏ., எம்.பி. அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் இருந்த தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டன.

    மேலும் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையும் உடனடியாக தொடங்கியது. தேர்தல் நடத்தை விதிமுறைப்படி உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும். மேலும் வாக்காளர்களுக்கு வழங்கும் நோக்கில் எடுத்துச் செல்லப்படும் பரிசுப்பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள்.

    தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில்அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகளாக இருக்கும் கலெக்டர்கள் நேரடியாக களமிறங்கினர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை உடனடியாக வாகன சோதனையில் ஈடுபட உத்தரவு பிறப்பித்தனர்.

    இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள், உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் உதவியுடன் சோதனையை தொடங்கினர்.

    நகரின் முக்கிய சந்திப்புகளில் நின்று அவர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை மறித்து பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரும், துணை ராணுவ படையினரும் துப்பாக்கி ஏந்தியபடி நின்று பாதுகாப்பு அளித்தனர்.

    இரவு விடிய விடிய சோதனை நடந்தது. பல இடங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லப்பட்ட பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவை கருவூலகங்களில் ஒப்படைக்கப்பட்டன.

    தொடர்ந்து இன்று காலையிலும் பறக்கும் படை அதிகாரிகள் தங்கள் சோதனையை தீவிரப்படுத்தினர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, நாகர்கோவில் என பல இடங்களில் இன்று தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த ஒரே நாளில் தமிழகம் முழுவதும் ரூ.1.26 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க 2,016 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேற்று மாலை முதல் சோதனையை தொடங்கி உள்ளனர்.

    வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்தால் கொண்டு செல்லலாம். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படை அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம்.

    தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.1.26 கோடி மதிப்பிலான பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் எடுத்துச் செல்வோர் அதற் கான ரசீதுகளை வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆனாலும் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் அருகே இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வந்த பங்கஜ் என்பவர் பெரும் தொகையை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. சோதனையில் அவரிடம் ரூ.35 லட்சம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

    பறக்கும் படை அதிகாரிகள் அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்களை கேட்டபோது, பங்கஜிடம் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளின்படி அந்த 35 லட்சம் ரூபாயையும் அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 35 லட்சமும் பாதுகாப்பாக திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் திருப்பூர் குமரன் சாலையில் இன்று காலை பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது கட்டுக்கட்டாக ரூ.6 லட்சம் பணம் இருந்தது.அதனை பொள்ளாச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கொண்டு வந்தார். அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    கோவை உக்கடம் பகுதியில் இன்று பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். ஒரு காரில் 25 சில்வர் தட்டுகள் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் வாக்காளர்களுக்கு பரிசாக கொடுக்கும் நோக்கில் அவை கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்ற நோக்கில் அவை பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவலூரில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து பெருந்துறையை நோக்கி தக்காளி பாரம் ஏற்றிச் சென்ற சரக்கு வேனை இன்று காலை தடுத்துநிறுத்தி சோதனை செய்தனர்.

    வேனில் இருந்த கர்நாடக மாநிலம் பசுவநாபுரத்தை சேர்ந்த மகாதேவ்(38) என்பவரிடம் ரூ.53,200 பணம் இருந்தது. பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

    பெரம்பலூர் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் பறக்கும் படை குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, சேலத்தில் இருந்து சுவாமிமலை நோக்கி சென்று கொண்டிருந்த விவேகானந்தர் என்பவர் ஓட்டி வந்த காரை தணிக்கை செய்தபோது எந்தவித ஆவணங்களும் இன்றி அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    நெல்லை தோட்டக்கலை அலுவலர் கோகுல பிரியா தலைமையிலான பறக்கும் படையினர் பாளை தியாக ராஜ நகர் பகுதியில் வாகன சோதனை செய்தபோது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து பாலாஜி என்பவர் காரில் வந்தார். அவரை சோதனை செய்தபோது அவரிடம் ரூ.1.40 லட்சம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பணம் பாளை தாசில்தார் இசக்கி பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    அரியலூர் மாவட்டம் இருங்கலா குறிச்சி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் தனது காரில் ஆத்தூர் நோக்கி சென்றார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அவரது காரை நிறுத்தி பறிக்கும் படையினர் சோதனை நடத்தினார்கள்.

    வேல்முருகன் கொண்டு வந்த பையில் ரூ.12 லட்சம் இருப்பது தெரிய வந்தது. அந்த பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ராஜேஷ் இன்று காலை ஆரணி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக லோடு ஆட்டோவில் வந்தார். அப்போது அவரிடம் ரூ. 75 ஆயிரத்து 500 இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் வளையாத்துரை சேர்ந்த புகழ் இன்று காலை தனது மோட்டார்சைக்கிளில் ஆரணி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்பங்தாங்கள் கூட்ரோடு அருகே தேர்தல் பறக்கும் படையினர் புகழை நிறுத்தி சோதனை செய்தனர். அவரது பையில் ரூ.1 லட்சம் இருந்தது. ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூ வாடி சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்தல் விதிமுறைக்குட்பட்டு எந்தவித பொருட்களையும் எடுத்து வர அனுமதிக்கப்படுவதில்லை.

    இரு மாநிலங்களுக்கும் இடையே இயக்கப்படும் கார் உள்ளிட்ட அனைத்து விதமான வாகனங்களையும் நிறுத்தி சோதனை நடத்திய பின்னரே போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

    சென்னையில் பறக்கும் படையினருடன் இணைந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் உள்ள 12 துணை கமிஷனர்கள் தலைமையில் இந்த வாகன சோதனை நடைபெற்றது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று காய்கறி ஏற்றி சென்ற லாரி, வேன், மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் பறக்கும் படை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் சென்னையில் பல இடங்களில் கார்கள் மற்றும் மினி லாரிகளை மடக்கி சோதனையில் ஈடுபட்டனர். பார்சல் கொண்டு சென்றவர்களிடம் என்ன பார்சல் என்று பரிசோதனை செய்தே அனுப்பினார்கள்.

    மேலும் மோட்டார் சைக்கிள்களையும் வழி மறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள்களில் உள்ள பெட்டி, இருக்கைகளுக்கு அடியில் பொருள் வைக்கும் இடம் ஆகியவற்றையும் திறந்து பார்த்தனர்.

    சென்னை மாநகர பகுதிகள், தாம்பரம், ஆவடி மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இனிவரும் நாட்களில் சோதனை தீவிரம் அடைய உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். உரிய ஆவணம் கொடுத்து பணத்தை பெற்று செல்லலாம்.

    அதிக அளவில் பணம் எடுத்து சென்றால் வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பார்கள். இதே போல் வியாபாரிகள் நகை, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை மொத்தமாக வாங்கி செல்லும்போது அதற்கான உரிய ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவைகள் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டிமான்டி காலனி 3 திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

    இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ஆம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இந்தப் படமும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக மாறியது.

    உலகளவில் டிமான்டி காலனி 2 திரைப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தையும் உருவாக்கி இருக்கிறது. இந்தப் பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்தப் படம் வருகிற மே மாத வாக்கில் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு நிலையில், டிமான்ட்டி காலனி 3 திரைப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி டிமான்டி காலனி 3 திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை உணர்த்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    மேலும், டிமான்டி காலனி 3 படத்தின் லைப்ரரியன் நாளை (மார்ச் 17) மாலை 5.01 மணிக்கு வருவதாக படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தப் படம் ரிலீசுக்கு முன்பே ரூ.50 கோடி வசூலித்துள்ளதாகவும், படத்தின் ஆடியோ உரிமத்தை டி சீரிஸ் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், தொலைக்காட்சி மற்றும் ஓ.டி.டி. உரிமத்தை ஜீ தமிழ் மற்றும் ஜீ5 நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வங்கதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி இழந்தது.
    • நெதர்லாந்து அணி கூட நம்மை வீழ்த்தி டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுவிடலாம் என நினைக்கும்.

    பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் 2 போட்டிகளின் முடிவில் இருவரும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்றிருந்தனர்.

    இதனையடுத்து தொடரை கைப்பற்றும் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேச மண்ணில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

    இந்நிலையில் இருதரப்பு தொடர்களிலேயே வெற்றி பெற முடியாத நிலையில், ஐசிசி கோப்பையை என்ன திருடியா கொண்டு வரப்போகிறீர்கள் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடவுளுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். நாம் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டோம் என்பதை பாருங்கள். ஜிம்பாப்வே போன்ற அணிகள் கூட நம்மை எளிதாகத் தோற்கடித்துவிடும் போலிருக்கிறது. நெதர்லாந்து அணி கூட பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் ஆடினால், நம்மை வீழ்த்தி டெஸ்ட் அந்தஸ்தை எளிதாக பெற்றுவிடலாம் என நினைக்கும். அந்த அளவுக்கு கிரிக்கெட்டை கேலிக்கூத்தாக்கி விட்டீர்கள்.

    பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஏன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தீர்கள்? வங்கதேச அணி 350 ரன்கள் குவித்திருக்கும். லிட்டன் தாஸ் மெதுவாக ஆடியதால் தான் 290 ரன்களுக்குள் சுருண்டனர். இருதரப்பு தொடர்களிலேயே வெற்றி பெற முடியாத நிலையில், ஐசிசி கோப்பையை என்ன திருடியா கொண்டு வரப்போகிறீர்கள்.

    பாகிஸ்தான் அணியின் போட்டிகளை இனி ஒரு சீரியஸான ஆட்டமாகப் பார்க்க முடியாது. இது ஒரு 'காமெடி சீரிஸ்' போல ஆகிவிட்டது.

    என கம்ரான் அக்மல் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிளஸ்-2 மாணவி கொலை சம்பவம் குறித்து அறிவியல் பூர்வமான விசாரணையை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது.
    • மாணவி கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியனை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறோம்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆ.குமாரபுரத்தை சேர்ந்த வக்கீல் மாரீஸ்வரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் பிளஸ்-2 மாணவி கடந்த 10-ந்தேதி மாயமான நிலையில், 11-ந்தேதி உடலில் படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். மாணவி கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், விசாரணையை முறையாக நடத்தவும் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும், மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், இந்த கொலை வழக்கின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதியை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு பிளஸ்-2 மாணவி கொலை சம்பவம் குறித்து அறிவியல் பூர்வமான விசாரணையை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதிராமன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதிடுகையில், குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றார்.

    இதற்கிடையே மாணவியின் பெற்றோர் சார்பில் ஆஜரான வக்கீல், மாணவி இறப்பு விவகாரத்தில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது நீதிபதிகள் இந்த விவகாரத்தை பொருத்த அளவில் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் சம்பந்தமில்லாத நபர்களை கைது செய்து விடுவார்கள் என்றனர்.

    பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அவர்களுடைய வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக போலீசார் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மாணவி கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியனை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறோம். இந்த விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தொடர்ந்து மாணவி கொலை வழக்கை இந்த கோர்ட்டு தீவிரமாக கண்காணிக்கும் என்று உத்தரவிட்டு, ஏப்ரல் 2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் ஓய்வில் இருந்தேன்.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    கூட்டத்தில் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மு.பெ.சாமிநாதன் மற்றும் எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சில நாட்கள் ஓய்வில் இருந்தேன். இப்போது குணம் அடைந்து விட்டேன். இதனால் கட்சிப் பணியையும் தொடங்கிவிட்டேன். வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×