என் மலர்

    செய்திகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.

    ரிஷபம்

    முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். உடன்பிறப்புகளால் விரயம் உண்டு. நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    மிதுனம்

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். வேலைப்பளுவின் காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாமா என்று யோசிப்பீர்கள்.

    கடகம்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு கேட்ட இடத்திலிருந்து உதவி கிடைக்கும். மதிய நேரத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும்.

    சிம்மம்

    விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். உடன் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகப் பிரச்சனைக்கு அலைபேசி மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

    கன்னி

    கடன் சுமை குறையும் நாள். காரிய வெற்றி உண்டு. காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவால் புதிய வேலை கிடைக்கும்.

    துலாம்

    துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். பொருளாதார வளர்ச்சி பெருகும். தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள்.

    விருச்சிகம்

    வருமானம் திருப்தி தரும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்திலிருந்து விருப்ப ஓய்வில் வெளிவருவது பற்றி சிந்திப்பீர்கள்.

    தனுசு

    வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சி கைகூடும். பழைய கடன்களை கொடுத்து மகிழும் வாய்ப்பு உண்டு.

    மகரம்

    குடும்பச் சுமை கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பர். கூடுதல் சம்பளத்துடன் கூடிய வேலை தேடி வரும்.

    கும்பம்

    வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி ஆதாயம் தரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

    மீனம்

    எடுத்த முயற்சியில் எண்ணற்ற தடைகள் ஏற்படும் நாள். வரவை காட்டிலும் செலவு கூடும். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உத்தியோக வாய்ப்பு கைநழுவிச் செல்லலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
    • இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்த ஆண்டு நடக்கவுள்ள இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. துணை ஜனாதிபதி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்று துணை ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர்.

    இதற்காக அந்த உறுப்பினர்களுக்கான வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிப்பது அவசியமாகும். அந்தவகையில் தற்போதைய தரவுகளுடன் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயார் செய்து இறுதி செய்துள்ளது.

    துணை ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லண்டனில் மாடி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
    • மருத்துவமனை அருகே சென்றபோது அந்த பஸ்சில் தீப்பிடித்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மாடி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. போர்ட்லேண்ட் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே சென்றபோது அந்த பஸ்சில் திடீரென தீப்பிடித்தது.

    இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

    முன்னதாக, பஸ்சில் இருந்த பயணிகளை அவசரமாக வெளியேற்றினர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    மருத்துவமனை அருகே மாடி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையரில் இந்திய ஜோடி 2வது சுற்றில் வெற்றி பெற்றது.

    மக்காவ்:

    மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, ஜப்பானின் ஹிரோகி நிஷி-காகேரு குமாகாய் ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 10-21 என இழந்த இந்திய ஜோடி அடுத்த இரு செட்களை 22-20, 21-16 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    மற்றொரு போட்டியில் இந்தியாவின் சாய் பிரதீக்-பிருதிவி கிருஷ்ணமூர்த்தி ராய் ஜோடி, மலேசிய ஜோடியிடம் தோல்வி அடைந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின.
    • ராணுவத்தினருக்கு எதிரான மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

    நேபிடாவ்:

    மியான்மரில் கடந்த 2020-ல் கடைசியாக தேர்தல் நடந்தது. இதில் ஆங் சான் சூகியின் கட்சி பெரிய வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக்கூறி 2021-ம் ஆண்டு அரசைக் கலைத்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார்.

    அவசர நிலையை அறிவித்து ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலியாங் அதிகாரத்தை கைப்பற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அப்போது போராட்டக்காரர்கள் மீது ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில், ராணுவ ஆட்சித்தலைவர் மின் ஆங் ஹிலியாங் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    தேர்தலில் மோசடி நடைபெற்றதால்தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. எனவே நேர்மையான முறையில் தேர்தல் நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரிடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்படும். இதனால் அடுத்த 6 மாதங்களுக்குள் பாராளுமன்ற தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 4 ஆண்டாக உள்ள ராணுவ அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ் சினிமா இதுவரை அதிகம் கண்டிராத ஒரு புதிய ஜானரில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வெளியான திரைப்படம் 'கலியுகம்'.
    • சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, குடும்ப ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற '3BHK' திரைப்படம்

    திரையரங்குகளுக்கு நிகராக, ஓடிடி தளங்கள் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பெரும் விருந்தளித்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரமும் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் விறுவிறுப்பான த்ரில்லர் முதல் மனதை வருடும் குடும்பக் கதை வரை பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றில் சில முக்கியப் படங்களைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கே காணலாம்.

    1. கலியுகம் (Kaliyugam)

    தமிழ் சினிமா இதுவரை அதிகம் கண்டிராத ஒரு புதிய ஜானரில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வெளியான திரைப்படம் 'கலியுகம்'. இது ஒரு போஸ்ட்-அபோகாலிப்டிக் சயின்ஸ்-ஃபிக்ஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்தது. 2050-ல் நடக்கும் இக்கதையில், உலகப் போருக்குப் பிந்தைய சூழலில் உயிர் பிழைப்பதற்காகப் போராடும் மனிதர்களின் உணர்ச்சிகளை மையமாக வைத்து, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    2. 3BHK

    சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, குடும்ப ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற '3BHK' திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. சரத்குமார் மற்றும் சித்தார்த் நடிப்பில், ஒரு நடுத்தரக் குடும்பத்தின் சொந்த வீடு கனவை யதார்த்தமாகப் பதிவு செய்துள்ள இப்படம், குடும்பத்துடன் பார்க்க ஒரு சிறந்த தேர்வாகும். இத்திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் டெண்ட் கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    3. தம்முடு (Thammudu) - தெலுங்கு

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நிதின் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் மற்றும் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த திரைப்படம் 'தம்முடு'. அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்ட இக்கதையில், ஒரு தம்பி தன் அண்ணனுக்காக எதையும் செய்யத் துணிவதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள். இது அதிரடி ஆக்ஷன் விரும்பிகளுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    4. கரமில கந்தர ஸ்வப்னம் (Karamila Kanthara Swapnam) - மலையாளம்

    வழக்கமான மலையாளப் படங்களின் பாணியில், ஆழமான உணர்வுகளைப் பேசும் ஒரு நாடகத் திரைப்படமாக 'கரமில கந்தர ஸ்வப்னம்' வெளியாகிறது. கனவுகள், லட்சியங்கள் மற்றும் மனித உறவுகளுக்கு இடையேயான சிக்கல்களைப் பற்றி பேசும் இப்படத்தில், ஸ்ரீநாத் பாசி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் போன்றோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    5. குப்பர் ஜிந்தகி (Kuppar Zindagi) - மலையாளம்

    இது ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையையும், அவன் சந்திக்கும் சவால்களையும் மையமாகக் கொண்ட ஒரு ஃபீல்-குட் திரைப்படமாக இருக்கும். மனோரமா மேக்ஸ் தளத்தில் வெளியாகும் இப்படம், யதார்த்தமான கதையம்சம் கொண்ட மலையாளப் படங்களின் ரசிகர்களைக் கவரும்.

    6. கட்ஸ் (Guts)

    அறிமுக இயக்குநர் ரங்கராஜ் இயக்கி நடித்துள்ள படம் கட்ஸ். ரங்கராஜ், நான்சி, டெல்லி கணேஷ், ஸ்ருதி நாராயணன், சாய் தீனா, பிர்லா போஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்தியாசமான கதை களத்தில் உருவான இப்படம்  டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி  உள்ளது.

    7. சிதாரே ஜமீன் பர் (Sitaare Zameen Par)

    இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அமீர் கான் நடிப்பில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டு மற்றும் உணர்ச்சிகரமான நாடகத் திரைப்படம் 'சிதாரே ஜமீன் பர்'. இந்தத் திரைப்படம் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் சந்தா முறையில் வெளியாகவில்லை. மாறாக, யூடியூப் (YouTube) தளத்தில் ஆகஸ்ட் 1, 2025 முதல், 'பே-பர்-வியூ' (Pay-per-view) முறையில், அதாவது பணம் செலுத்திப் பார்க்கும் வசதியுடன் வெளியாகிறது. இப்படத்தை மக்கள் 100 ரூபாய் கட்டி பார்க்கலாம்.

    8. சீஃப் ஆஃப் வார் (Chief of War)

    'Aquaman' புகழ் ஜேசன் மோமோவா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள பிரம்மாண்ட வரலாற்றுத் தொடர் 'சீஃப் ஆஃப் வார்'. இத்தொடர் ஆப்பிள் டிவி+ (Apple TV+) தளத்தில் வெளியாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லிதுவேனியா பிரதமர் ஜின்டாடஸ் பலுக்காஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
    • இதனால் லிதுவேனியா பிரதமர் ஜின்டாடஸ் பலுக்காஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    வில்னியஸ்:

    ஐரோப்பிய பால்டிக் பகுதியில் உள்ள நாடு லிதுவேனியா. பழைய சோவியத் யூனியன் நாடான இங்கு கடந்த ஆண்டு அக்டோபரில் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு சமூக ஜனநாயகக் கட்சியின் ஜின்டாடஸ் பலுக்காஸ் பிரதமராக தேர்வானார்.

    இதற்கிடையே, பிரதமர் ஜின்டாடாஸ் பலுக்காஸ், தனது மைத்துனியின் நிறுவனத்துடனான வணிக பரிவர்த்தனைகள் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டு எதிரொலியாக பிரதமர் பலுக்காஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த தகவலை லிதுவேனியா அதிபர் கீதானாஸ் நவுசேடா தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பலுக்காஸ் கூறுகையில், முறையற்ற வணிக உறவுகள் உள்ளன. கடந்த கால தவறுகளால் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதல் நாள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தது.
    • 3வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சன், சுப்மன் கில் ஜோடி 45 ரன்கள் சேர்த்தது.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் பும்ரா, பண்ட், அன்ஷுல் கம்போஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டு ஆகாஷ் தீப், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஜுரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    அதன்படி, இந்திய அணியின் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கே.எல்.ராகுல் 14 ரன்னில் அவுட்டானார். சாய் சுதர்சனுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார்.

    3வது விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 21 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடிய சாய் சுதர்சன் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 9 ரன்னில் அவுட்டானார். மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

    7வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பொறுப்புடன் ஆடிய கருண் நாயர் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் ஜோஷ் டாங்க், அட்கின்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அந்த நபரின் தற்போதைய மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண் மற்றும் ஒரு பூசாரியும் அந்தப் படத்தில் உள்ளனர்.
    • குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006, பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள நந்திகாமாவில், 40 வயது பள்ளி ஆசிரியர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தத் திருமணம் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்துதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த நபரின் தற்போதைய மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண் மற்றும் ஒரு பூசாரியும் அந்தப் படத்தில் உள்ளனர்.

    இது தொடர்பான புகாரில் ஆசிரியர் மற்றும் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006, பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

    இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியா இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்- டிரம்ப்
    • இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், இந்தியப் பொருளாதாரம் இறந்து விட்டது என்று டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். டிரம்ப் தனது எக்ஸ் பதிவில், "ரஷியாவுடனான இந்திய உறவு குறித்து எனக்கு கவலை இல்லை. இந்தியா விதிக்கும் வரிகள்தான் உலகிலேயே அதிகம். நாங்கள் அவர்களுடன் பெரிய அளவில் வணிகம் வைத்துக் கொண்டதில்லை. ரஷியாவுடனும் அமெரிக்கா வணிக உறவு கொண்டதில்லை. இந்தியா மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் இறந்து போன தங்களின் பொருளாதாரங்களை இன்னும் நாசமாக்கட்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்ற டிரம்பின் கருத்து குறித்து பேசிய ராகுல் காந்தி, "டிரம்ப் சொல்வது சரிதான், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் இது தெரியும். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதி டிரம்ப் ஒரு உண்மையை கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது உலகம் முழுவதுக்கும் தெரியும். பிரதமர் மோடி அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே பணியாற்றுகிறார். அதானிக்கு உதவ பாஜக இந்திய பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

    எங்களிடம் ஒரு சிறந்த வெளியுறவுக் கொள்கை உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகிறார். ஒருபுறம், அமெரிக்கா உங்களை துஷ்பிரயோகம் செய்கிறது. மறுபுறம், சீனா உங்கள் பின்னால் உள்ளது. நீங்கள் உங்கள் குழுவை உலகிற்கு அனுப்பியபோது, எந்த நாடும் பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை.

    பிரதமர் மோடி தனது உரையில் டிரம்ப், சீனாவின் பெயரை கூட சொல்லவில்லை. இந்த பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தானின் ராணுவத் தலைவர், ஜனாதிபதி டிரம்ப் அவருடன் மதிய உணவு அருந்துகிறார். நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்" என்று கூறினார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அனுராக் தாகூர் கூறுகையில் "உலகில் யாராவது ஒருவர் இந்தியாவுக்கு எதிராக கருத்தை வெளியிடும்போதெல்லாம், ராகுல் காந்தி அதை பிடித்துக் கொள்கிறுார். இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை உருவாக்குவது காந்தியின் மனநிலையாகிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

    பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா "'செத்துப்போன பொருளாதாரம்' என்ற பழிச்சொல்லை எதிரொலிப்பதன் மூலம் ராகுல் காந்தி புதிய கீழ்த்தரமான நிலையை சந்தித்துள்ளார்.. இது இந்திய மக்களின் விருப்பங்கள், சாதனைகள் மற்றும் நல்வாழ்வுக்கு அவமானகரமான அவமானம்.

    ஆனால் நேர்மையாகச் சொல்லப் போனால், இங்கே உண்மையிலேயே 'இறந்து போன' ஒரே விஷயம் ராகுல் காந்தியின் சொந்த அரசியல், நம்பகத்தன்மை மற்றும் மரபு.

    இவ்வாறு மாள்வியா தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • "360 டிகிரி" என்றழைக்கப்படும் ரோலர் கோஸ்டர் சுழலும்போது இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.
    • சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்தனர்.

    சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்ததில் 23 பேர் காயமடைந்தனர். மூவர் படுகாயமடைந்தனர்.

    இன்று பூங்காவில், "360 டிகிரி" என்றழைக்கப்படும் ராட்டினர் சுழலும்போது அதை தாங்கும் கம்பம் இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.

    இதனால் சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.    

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'சலம்பல' பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது.
    • மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவரது 23-வது படமான மதராஸி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

    இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சலம்பல' பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால் சில சுழ்நிலைக்காரணமாக பாடலை வெளியிட கூறிய நேரத்தில் வெளியிட முடியவில்லை.

    இந்நிலையில் தற்போது இந்த பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சாய் அபயங்கர் பாடியுள்ளார். இப்பாடல் ஒரு ஃபன் காதல் தோல்வி பாடலாக உருவாகியுள்ளது. மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×