இந்தியா

Ahmedabad Air Plane Crash- Live Update..! அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு
- ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது.
- இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
குஜராத் மாநிலம் அகமதாபத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட் ஏர் இந்தியா விமானம் டேக்ஆஃப் ஆன சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 242 பேர் பயணம் செய்தனர். விபத்தில் ஒருவரை தவிர்த்து 241 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Live Updates
- 12 Jun 2025 9:45 AM GMT
விபத்துக்குள்ளான விமானத்தில் 12 வயதுக்கு உட்பட்ட 14 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- 12 Jun 2025 9:41 AM GMT
விமானம் விழுந்ததில் கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. மீட்ப்புப்படையினர் தீயை அணைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
- 12 Jun 2025 9:35 AM GMT
அகிலேஷ் யாதவ், மணிஷ் சிசோடியா, அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட தலைவர்கள் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
- 12 Jun 2025 9:33 AM GMT
விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை தொடர்பு கொண்டு விமான விபத்து குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
Next Story





