என் மலர்

    தமிழ்நாடு செய்திகள்

    ஒரே கலரில்... ஒரே காரில்: கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழாவில் ஜோடியாக பங்கேற்ற விஜய் - த்ரிஷா!
    X

    'ஒரே கலரில்... ஒரே காரில்': கல்பாத்தி சுரேஷ் இல்லத் திருமண விழாவில் ஜோடியாக பங்கேற்ற விஜய் - த்ரிஷா!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரே காரில் வந்த இருவரும், ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்துவந்ததும் கவனம் ஈர்த்துவருகிறது.
    • நடிகை ஒருவருடன் உடனான தகாத உறவே விவாகரத்திற்கு காரணம்

    AGS குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ். சுரேஷின் மகன் திருமணம் இன்று சென்னையில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் மாலை திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    ஒரே காரில் வந்த இருவரும், ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்துவந்ததும் கவனம் ஈர்த்துவருகிறது. கடந்தவாரம் விஜய்யின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்துக்கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நடிகை ஒருவருடன் உடனான தகாத உறவே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விவாகரத்திற்கு நடிகை த்ரிஷாவுடனான தொடர்புதான் காரணம் என சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், இது குறித்து விஜய் அல்லது த்ரிஷா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இருவரும் ஒன்றாக விழாவில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×