என் மலர்

    உலகம் (World)

    விஷயம் டாப் சீக்ரெட்.. ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல் - கசிந்த அமெரிக்க ஆவணங்கள்
    X

    விஷயம் டாப் சீக்ரெட்.. ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலுக்கு ரெடியாகும் இஸ்ரேல் - கசிந்த அமெரிக்க ஆவணங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரான் மீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் நடத்தி ரகசியங்களை திருடியது.
    • ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறது

    பாலஸ்தீனம் மீது கடந்த 1 வருடமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது. ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தலைநகர் பெய்ரூட்டில் வைத்து கொல்லப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை சரமாரியாக ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் அணு உலைகள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் துடித்து வருகிறது. ஆனால் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. இதற்கிடையே ஈரான் மீது சைபர் தாக்குதல் ஒன்றையும் இஸ்ரேல் நடத்தியது. இதில் தங்கள் அரசின் ரகசிய ஆவணகள் திருடப்பட்டகாக ஈரான் குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக இஸ்ரேலின் முயற்சிகள் குறித்த அமெரிக்க உளவுத்துறையில் 2 ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. அமெரிக்காவின் நேஷனல் ஜியோஸ்பாஷியல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சியில் [NGA] இருந்த இந்த ஆவணங்களானது டெலிகிராமில் கசிந்துள்ளது.

    இந்த ஆவணங்களில் ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேலிய படைகள் பிரத்யேக பயிற்சி எடுத்துவரும் மற்றும் தாக்குதளுக்கு ஒத்திகை பார்க்கும் சாட்டிலைட் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

    முதல் ஆவணத்தில் இஸ்ரேல் விமானப் படை ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த எப்படியெல்லாம் தயாராகி வருகிறது என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு வானத்தில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தங்கள் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை தயார்ப்படுத்தி வருவது குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    Next Story
    ×