என் மலர்

    மொபைல்ஸ்

    மூன்று நிறங்களில் அறிமுகமான கேலக்ஸி S24 FE - விலை மற்றும் அம்சங்கள்
    X

    மூன்று நிறங்களில் அறிமுகமான கேலக்ஸி S24 FE - விலை மற்றும் அம்சங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் புளூ, கிராஃபைட் மற்றும் மின்ட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி ஓ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், எக்சைனோஸ் 2400e பிராசஸர், 8 ஜிபி ரேம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஓஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஏழு ஓஎஸ் அப்டேட்கள், ஏழு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது.


    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 8MP டெலிபோட்டோ லென்ஸ், OIS, 10MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    விலையை பொருத்தவரை கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 65 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது.

    Next Story
    ×