என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2025
அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2025
இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் பெருகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025
சுபச்செலவு ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் ஒருசில தொல்லைகளை சந்திக்க நேரிடும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். பக்கத்து வீட்டாருடன் பகை ஏற்படலாம்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 21 மார்ச் 2025
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கைமாற்றாகப் பெற்ற பணத்தை திருப்பிக் கேட்டு நிர்ப்பந்தம் செய்வர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 20 மார்ச் 2025
யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளுங்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அதிக முயற்சியின் பேரில் காரியம் கைகூடும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
மேஷம்
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025
அலைபேசி வழித் தகவலால் ஆதாயம் கிட்டும் நாள். உற்சாகத்தோடு செயல்படு வீர்கள். பண நெருக்கடிகள் தீரும். உடன் இருப்பவர்கள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
செல்போன் வழித் தகவல் சிந்திக்க வைக்கும் நாள். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
நன்மைகள் வந்து சேரும் நாள். கிளைத் தொழில் தொடங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இருந்த நெருக்கடி மாறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பில் சிறிது கரையலாம். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.