என் மலர்

    ராசிபலன் - Rasi Palan

    Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 31.07.2025
    X

    Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 31.07.2025

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். சொத்து பிரச்சனைகள் சுமூகமாக முடிவடையும். சொந்த பந்தங்களின் பகை மாறும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    ரிஷபம்

    நன்மைகள் நடைபெறும் நாள். நாடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். வருமானம் திருப்தி தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலும். தொழில் சீராக நடைபெறும்.

    மிதுனம்

    தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.

    கடகம்

    முயற்சி கைகூடும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும். பாகப் பிரிவினை சுமூகமாக முடியும்.

    சிம்மம்

    தொழில் போட்டிகள் அகலும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

    கன்னி

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். புதிய வேலைவாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    துலாம்

    காலையில் பணப் புழக்கமும், மாலையில் மனக்கலக்கமும் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் பிறர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பாகும் சூழ்நிலை உண்டு.

    விருச்சிகம்

    புகழ்மிக்கவர்களைச் சந்தித்து மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    தனுசு

    ரொக்கத்தால் வந்த சிக்' கல்கள் அகலும் நாள். பூமிப் பிரச்சனை தீரும். புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோக மாற்ற சிந்தனை அதிகரிக்கும்.

    மகரம்

    தெய்வ வழிபாடுகளால் திருப்தி காண வேண்டிய நாள். விரயங்கள் மேலோங்கும். உத்தியோக உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.

    கும்பம்

    மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சனைகள் உருவாகும். முயற்சியில் குறுக்கீடு உண்டு.

    மீனம்

    நிதிப்பற்றாக்குறை ஏற்படும் நாள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்வது அரிது. கையிருப்புக் கரையலாம்.

    Next Story
    ×