பைக்

ஆக்டிவா இ மாடலுக்காக ஹோண்டா வழங்கப்போகும் புது வசதி - என்ன தெரியுமா?
- ஹோண்டா ஆக்டிவா இ மாடலில் பேட்டரி மாற்றும் அமைப்பு மூலம் சார்ஜிங் வசதி உள்ளது.
- ஐரோப்பிய சந்தையில் விற்கப்படும் ஹோண்டா CUV இந்தியாவில் கிடைக்கும் ஆக்டிவா இ மாடலை போலவே உள்ளது.
ஹோண்டா நிறுவனம், பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் ஆக்டிவா இ மாடலை ரூ. 1.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன சந்தை வளர்ந்து வந்தாலும், நாட்டில் இன்னும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை உள்ளது. ஹோண்டா ஆக்டிவா இ மாடலில் பேட்டரி மாற்றும் அமைப்பு மூலம் சார்ஜிங் வசதி உள்ளது.
தற்போது வெளியாகி இருக்கும் அறிக்கைகளின்படி, ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ஆக்டிவா இ மாடலுக்கு சார்ஜிங் டாக் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சார்ஜிங் டாக் மூலம் பயனர்கள் வீட்டிலேயே மின்சார ஸ்கூட்டரை சார்ஜ் செய்யலாம். ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே ஐரோப்பா போன்ற பிற நாடுகளில் இந்த அமைப்பை வழங்கி வரும் நிலையில், இந்த வசதி விரைவில் இந்தியாவிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஏராளமான மின்சார இரு சக்கர வாகன ஆப்ஷன்கள் கிடைப்பதால், பயனர்கள் இப்போது ரேஞ்ச் மற்றும் பிற அம்சங்களில் கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், சார்ஜிங் மற்றும் சேவைக்கான செலவு போன்ற முக்கிய காரணிகளையும் கருத்தில் கொள்கிறார்கள்.
ஐரோப்பிய சந்தையில் விற்கப்படும் ஹோண்டா CUV இந்தியாவில் கிடைக்கும் ஆக்டிவா இ மாடலை போலவே உள்ளது. இருப்பினும், CUV:e 270W டாக் சார்ஜரைப் பெறுகிறது. இதை கொண்டு பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6 மணி நேரம் ஆகும்.