பைக்

தீபாவளிக்கு முன் அறிமுகமாகும் கைனடிக் ஹோண்டா டி.எக்ஸ் இ.வி. ஸ்கூட்டர்
- அடுத்த 18 மாதங்களில் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்த நிறுவனம் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- ஸ்கூட்டர்கள் இத்தாலியை சேர்ந்த டொரினோ டிசைன் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.
கைனடிக் கிரீன், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் சோதனை ஓட்டம் தொடர்பான படங்கள் இணையதளங்களில் சமீபத்தில் வெளியாகின.
இந்நிலையில், அடுத்த 18 மாதங்களில் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்த நிறுவனம் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கைனடிக் ஹோண்டா டி.எக்ஸ் இ.வி. முதன் முதலாக அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.
வரவிருக்கும் கைனடிக் டிஎக்ஸ், டிஎஃப்டி டிஸ்ப்ளே மற்றும் மேம்பட்ட IOT திறன்களுடன் ரெட்ரோ தீம்களில் வழங்கப்படும். கூடுதலாக, இது ஜியோ திங்ஸுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு மேம்பட்ட டிஜிட்டல் தளத்தையும் கொண்டிருக்கும். இந்த ஸ்கூட்டர்கள் இத்தாலியை சேர்ந்த டொரினோ டிசைன் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை Born Electric வடிவமைப்பு தத்துவத்தின் அடிப்படையில் அசத்தலான ஸ்டைலிங் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
டி.எக்ஸ் இ.வி. தான் முதலில் அறிமுகமாகும் என நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனினும், சோதனை ஓட்ட புகைப்படங்கள் மூலம் தீபாவளி பண்டிகைக்கு முன் வெளியாகலாம் என வாகன சந்தையினர் கூறுகின்றனர்.