என் மலர்

    பைக்

    வேற லெவல் அப்கிரேடுகளுடன் என்டார்க் 125 கேப்டன் அமெரிக்கா எடிஷன் அறிமுகம்
    X

    வேற லெவல் அப்கிரேடுகளுடன் என்டார்க் 125 கேப்டன் அமெரிக்கா எடிஷன் அறிமுகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் புதிய எடிஷனை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
    • டிவிஎஸ் என்டார்க் மாடல் பல்வேறு வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    மார்வெல் சீரிசின் பிரபர கதாபாத்திரங்களில் ஒன்று கேப்டன் அமெரிக்கா. உலகளவில் கேப்டன் அமெரிக்கா திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் ஏராளம். இந்த நிலையில், கேப்டன் அமெரிக்கா அம்சங்களால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்ட என்டார்க் 125 ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய டிவிஎஸ் என்டார்க் 125 கேப்டன் அமெரிக்கா எடிஷனின் விலை ரூ.98,117 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சூப்பர் ஸ்குவாட் பதிப்பு இரு சக்கர வாகனங்கள் மார்வெல் சூப்பர் ஹீரோக்களால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரிசில், கேப்டன் அமெரிக்காவால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்ட இரண்டாவது எடிஷன் இது ஆகும்.

    விவரங்களைப் பொறுத்தவரை, டிவிஎஸ் என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் எடிஷன் 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பழைய மாடல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த புதிய மாடல் ஸ்கூட்டர் சூப்பர் ஹீரோவால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு குறிப்புகளுடன் கூடிய கேமோ-ஸ்டைல் கிராபிக்ஸ்களைப் பெறுகிறது.

    இளம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் புதிய எடிஷனை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேப்டன் அமெரிக்கா தவிர்த்து தோர், ஸ்பைடர் மேன், பிளாக் பாந்தர் மற்றும் அயர்ன் மேன் ஆகியவற்றைக் கொண்ட பிற மாடல்களும் சந்தையில் கிடைக்கின்றன.

    டிவிஎஸ் என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் ஸ்டான்டர்டு எடிஷனை போன்றே இந்த மாடலிலும் 9.5 hp பவர், 10.5 Nm பீக் டார்க் வழங்கும் 124.8 cc, ஏர்-கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட் தோற்றமுடைய இந்த ஸ்கூட்டரில் புளூடூத் இணைப்பு, முழுமையான டிஜிட்டல் டிஸ்ப்ளே, SmartXonnect மற்றும் பல அம்சங்கள் உள்ளன.

    டிவிஎஸ் என்டார்க் மாடல் பல்வேறு வெர்ஷன்களில் கிடைக்கிறது. என்டார்க் 125 சூப்பர் ஸ்குவாட் எடிஷன் ரூ.98,117 விலையில், ரேஸ் எடிஷன் மற்றும் ரேஸ் XP எடிஷன்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் யமஹா ரே ZR 125, அப்ரிலியா SR125, ஹீரோ ஜூம் 125, ஹோண்டா டியோ 125 மற்றும் பிற மாடல்களுடன் போட்டியிடுகிறது.

    Next Story
    ×