கார்

புதிய கார் வெளியீட்டுக்கு தேதி குறித்த வால்வோ - எந்த மாடல், எப்போ தெரியுமா?
- 2025 வால்வோ XC60 தற்போதைய மாடலை போன்ற தோற்றம் கொண்டுள்ளது.
- புதிய வால்வோ XC60 காரில் புதுப்பிக்கப்பட்ட இருக்கை மேற்கவர்கள் மற்றும் கேபின் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் XC60-ஐ வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்தது. இருப்பினும், இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை சில மாதங்களுக்கு தள்ளி வைத்தது. அந்த வரிசையில், தற்போது வால்வோ XC60 மாடல் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி வெளியிட வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் தான், வால்வோ நிறுவனம் XC60 விற்பனையில் 2.7 மில்லியனுக்கும் அதிக யூனிட்களை பதிவு செய்ததாக அறிவித்தது. இது அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையான மாடலாக இருந்த வால்வோ 240 மாடலை மிஞ்சியது. 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, வால்வோ கார்களின் நடுத்தர அளவிலான SUV வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிடித்தமானதாக இருந்து வருகிறது.
வெளிப்புற புதுப்பிப்புகள்:
2025 வால்வோ XC60 தற்போதைய மாடலை போன்ற தோற்றம் கொண்டுள்ளது. பின்புறத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஏர் வென்ட்களுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட கிரில், ஸ்மோக்டு-அவுட் எஃபெக்ட் கொண்ட டெயில்-லேம்ப்கள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் என பல வடிவமைப்பு மாற்றங்களை பெறுகிறது.
உட்புற புதுப்பிப்புகள்:
2025 வால்வோ XC60 காரில் புதிய UX மற்றும் OTA அப்டேட்களுடன் கூடிய பெரிய 11.6-இன்ச் ஃப்ரீஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் இருக்கும். புதிய வால்வோ XC60 காரில் புதுப்பிக்கப்பட்ட இருக்கை மேற்கவர்கள் மற்றும் கேபின் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதுதவிர இந்த மாடலில் போவர்ஸ் & வில்கின்ஸ் ஹை ஃபிடிலிட்டி ஆடியோ சிஸ்டம் மற்றும் பிற முக்கிய இன்டீரியர் அம்சங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
எஞ்சின் மற்றும் பவர்டிரெய்ன்:
வால்வோ XC60 இன் 2025 மாடல் அதன் தற்போதைய மாடலைப் போலவே அதே எஞ்சினைக் கொண்டிருக்கும். இது 2.0 லிட்டர் டுவின்-டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெறுகிறது. இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் அதிகபட்சம் 250 hp பவர், 360 Nm பீக் டார்க் வழங்கும் திறன் கொண்டது.