கார்

2024-25ம் நிதியாண்டில் டீசல் கார்களை விட CNG கார்களையே மக்கள் அதிகம் வாங்கியுள்ளதாக தகவல்
- பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாகும்.
- சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது
இந்தியாவில் 2024-25ம் நிதியாண்டில் டீசல் கார்களைக் காட்டிலும் சிஎன்ஜி கார்களையே மக்கள் அதிகம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நிதியாண்டில் 7,87,724 சிஎன்ஜி கார்களும், 7,36,508 டீசல் கார்களும் விற்பனையாகியுள்ளன.
கடந்த நிதியாண்டில் பயணிகள் கார் விற்பனையில் 15 சதவீதமாக இருந்த சிஎன்ஜி கார் விற்பனை இப்போது 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலை விலையை விட சிஎன்ஜி விலை குறைவாக உள்ளதால் பலரும் சிஎன்ஜி கார்களை விரும்புகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
மொத்த சிஎன்ஜி கார் விற்பனையில் மாருதி சுசுகி நிறுவனம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story