கார்

இந்திய வெளியீட்டுக்கு ரெடியாகும் ஹூண்டாய் பேயோன்
- ஹூண்டாய் பேயோன் LED ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்ட பூமராங் வடிவ டெயில்லேம்ப், பம்பரில் பிளாக் மற்றும் சில்வர் அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது.
- 160 hp பவர், 253 Nm இன் டார்க் வெளிப்படுத்தும்.
ஹூண்டாய் தற்போது 2026 ஆம் ஆண்டில் பேயோன் எஸ்யூவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இந்த சப்-காம்பாக்ட் எஸ்யூவி ஹூண்டாய் உருவாக்கிய புதிய எஞ்சின் மூலம் இயக்கப்படும். மேலும், 2030 ஆம் ஆண்டுக்குள் 26 புதிய கார்களை நாட்டிற்கு கொண்டு வர ஹூண்டாய் ஏற்கனவே தனது திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் வருகையுடன், ஹூண்டாய் பேயோன் இந்தியாவில் மாருதி சுசுகி ஃபிராங்க்ஸ் போன்றவற்றுடன் போட்டியிடும்.
ஹூண்டாய் பேயோன்: வெளிப்புறம்
புதிய ஹூண்டாய் பயோன் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனையில் உள்ளது. எனவே, பயோன் இந்தியா மாடல்களில் அதிக மாற்றங்கள் இருப்பது சந்தேகம் தான்.
இந்த சிறிய எஸ்யூவி காரின் முன்பக்க வடிவமைப்பு அம்சங்கள் ஹூண்டாய் வெர்னாவில் இருந்து பெறப்பட்டுள்ளன. இது நேர்த்தியான ஹெட்லேம்ப் அமைப்பு, பானட்டில் LED ஸ்ட்ரிப், ஹனிகொம்ப் வடிவ ஏர் டேம்கள் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. பின்புறத்தில், ஹூண்டாய் பேயோன் LED ஸ்ட்ரிப் மூலம் இணைக்கப்பட்ட பூமராங் வடிவ டெயில்லேம்ப், பம்பரில் பிளாக் மற்றும் சில்வர் அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது.
ஹூண்டாய் பேயோனின் உட்புறம் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்-ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, HVAC கண்ட்ரோல் பேனல், வயர்லெஸ் சார்ஜிங், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்கள், வேகமாக சார்ஜ் செய்யும் USB டைப்-சி போர்ட்கள், சுற்றுப்புற விளக்குகள், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பல உள்ளன.
ஆட்டோகார் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஹூண்டாய் பேயோன் பிராண்டின் புதிதாக உருவாக்கப்பட்ட 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படும். மேலும் இது 160 hp பவர், 253 Nm இன் டார்க் வெளிப்படுத்தும். இத்துடன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் ஆப்ஷனும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.