என் மலர்

    கார்

    ரூ. 2.07 கோடி விலையில் புதிய போர்ஷே கார் அறிமுகம் - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    ரூ. 2.07 கோடி விலையில் புதிய போர்ஷே கார் அறிமுகம் - என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முழு கருப்பு தோற்றத்துடன் செல்ல, 21-இன்ச் ஏரோடைனமிக் சக்கரங்களும் கிளாஸ் பெயின்ட் தீம் பெற்றிருக்கிறது.
    • இரண்டு மோட்டார்கள் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை விநியோகிக்கிறது.

    போர்ஷே நிறுவனம், Taycan 4S பிளாக் எடிஷனை அறிமுகப்படுத்தி, அதன் பிளாக் எடிஷன் மாடல்களின் வரம்பை விரிவுபடுத்தியுள்ளது. புதிய கார் ரூ. 2.07 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த காருடன் வரும் இதர ஆப்ஷனல் பேக்கேஜ்களை தேர்வு செய்தால், இந்த விலை மேலும் அதிகரிக்கும்.

    கெய்ன் பிளாக் எடிஷனைப் போலவே, Taycan 4S காரின் நிலையான மாடலோடு ஒப்பிடும்போது வெளிப்புற மற்றும் உட்புற மாற்றங்களைப் பெறுகிறது. வெளிப்புற வடிவமைப்பில் தொடங்கி, போர்ஷே Taycan S பிளாக் எடிஷன், ஏப்ரான், சைடு ஸ்கர்ட்ஸ், ரியர் டிஃப்பியூசர் மற்றும் ORVM இன் கீழ் பகுதி உள்ளிட்ட முன்பக்கத்தில் பல பகுதிகளில் ஹை-கிளாஸ் பிளாக் பெயின்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

    விஷயங்களை இன்னும் சிறப்பானதாக்க, நிறுவனம் பேட்ஜ்கள் மற்றும் எழுத்துக்களையும் கருப்பு நிறமாக்கியுள்ளது. முழு கருப்பு தோற்றத்துடன் செல்ல, 21-இன்ச் ஏரோடைனமிக் சக்கரங்களும் கிளாஸ் பெயின்ட் தீம் பெற்றிருக்கிறது. ஹெட்லேம்ப்களும் ஸ்மோக்டு எஃபெக்ட் பெறுகின்றன.

    Taycan 4S பிளாக் எடிஷன் 13 வெளிப்புற வண்ணத் தேர்வுகளுடன் தரநிலையாக வருகிறது - பிளாக், வைட், ஜெட் பிளாக் மெட்டாலிக், ஐஸ் கிரே மெட்டாலிக், வொல்கனோ கிரே மெட்டாலிக், டோலமைட் சில்வர் மெட்டாலிக், ஜெண்டியன் புளூ மெட்டாலிக், கார்மைன் ரெட், புரோவென்ஸ், நெப்டியூன் புளூ, ஃபுரோசன் பெர்ரி மெட்டாலிக், ஃபுரோசன் புளூ மெட்டாலிக் மற்றும் பர்பிள் ஸ்கை மெட்டாலிக் ஆகியவை அடங்கும்.



    உள்ளே, Taycan 4S பிளாக் எடிஷன் தோற்றம் அதன் ஸ்டாண்டர்டு மாடலைப் பிரதிபலிக்கிறது. மேலும் பிளாக் எடிஷன் கருப்பு நிறத்தில் இரண்டு Race-tex (Alcantara/leatherette) உட்புற அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்களையும், இரண்டு திடமான லெதர் தேர்வுகளையும் வழங்குகிறது. டூயல்-டோன் இன்டீரியர் வடிவமைப்புகள் விரும்புவோர் தேர்வு செய்யக்கூடிய ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    அம்சங்களின் பட்டியலில் பனோரமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா, ADAS சூட், 14 வழிகளில் பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் 710 வாட் திறன் கொண்ட 14-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.

    பிளாக் எடிஷனின் பவர்டிரெய்ன் ஸ்டான்டர்டு Taycan 4S ஐப் போன்றே, 105kWh பேட்டரி பேக் (WLTP வரம்பு 668 கிமீ) கொண்டுள்ளது. மேலும் இரண்டு மோட்டார்கள் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை விநியோகிக்கிறது. இவை ஒன்றாக அதிகபட்சமாக 598 hp திறன் மற்றும் 710 Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

    இது காரை 3.7 வினாடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும். மேலும் 320kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தி பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும்.

    Next Story
    ×