இது புதுசு

125சிசியில் முற்றிலும் புதிய பல்சர் பைக் உருவாக்கி வரும் பஜாஜ்
- புதிதாக வரவிருக்கும் 125cc மோட்டார்சைக்கிள் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
- அனைத்து பிரிவுகளிலும், 125cc மோட்டார்சைக்கிள் பிரிவு நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டு இந்தியாவில் ஒரு புதிய 125சிசி பைக்கை அறிமுகம் செய்ய பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் பஜாஜ் நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிளை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.
புதிதாக வரவிருக்கும் 125cc மோட்டார்சைக்கிள் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இது ஒரு ஆக்ரோஷமான விலைக் குறியீட்டைக் கொண்டிருக்கும். இருப்பினும், இந்த மோட்டார்சைக்கிளின் தயாரிப்பு நிலை குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை. இந்த பைக் பல்சர் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படும்.
தற்போதைய நிலவரப்படி, பல்சர் 125க்கும் பல்சர் NS125க்கும் இடையே ஒரு நல்ல விலை இடைவெளி உள்ளது. எனவே பஜாஜ் இந்த புதிய 125cc மோட்டார்சைக்கிள் மூலம் அந்த இடைவெளியை சரிசெய்ய விரும்புகிறது.
அனைத்து பிரிவுகளிலும், 125cc மோட்டார்சைக்கிள் பிரிவு நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் விளைவாக, பல வாகன உற்பத்தியாளர்கள் புதிய பைக்குகளை அறிமுகம் செய்து வருகின்றன. சமீபத்தில், ஹோண்டா CB 125 ஹார்னெட் மாடலை அறிமுகப்படுத்தியது. ஹீரோ நிறுவனம் கிளாமர் X 125 மாடலை அறிமுகப்படுத்தியது. இரண்டும் 125cc பிரீமியம் பிரிவில் மோதுகின்றன.