சினிமா செய்திகள்

`சிம்பு அண்ணன் இயக்கத்தில் நடிக்க ஆசை' - ஹரிஷ் கல்யாண்
- பார்க்கிங்', 'லப்பர் பந்து' போன்ற படங்களில் நடித்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
- தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
'பார்க்கிங்', 'லப்பர் பந்து' போன்ற படங்களில் நடித்து அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து படத்தின் அடுத்த பாடலான தில்லுபரு ஆஜா வெளியானது. இப்பாடலை சிம்பு பாடினார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.
சமீபத்தில் நடந்த தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிம்பு, சாய் அபயங்கர், ஹரிஷ் கலயாண் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். அப்பொழுது ஹரிஷ் கல்யாணின் விருதை சிலம்பரசன் அவருக்கு வழங்கினார். அப்பொழுது தொகுப்பாளர் "நீங்கள் இருவரும் சகோதரர் போல் இருப்பது எங்கள் அனைவருக்கு தெரியும். நீங்கள் இருவரும் இணைந்து திரைப்படம் நடிப்பீர்களா? எம்மாதிரி கதைக்களத்தில் நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பினார்"
அதற்கு சிம்பு " கண்டிப்பாக நடிக்கலாம் அதற்கான கதையமைந்தால் சந்தோஷம் தான், மேலும் ஹரிஷ் அதற்கு நாங்கள் நடிக்கும் திரைப்படத்தை சிம்பு அண்ணன் இயக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்" என கூறியுள்ளார்.