சினிமா செய்திகள்

திரைவிமர்சனம் : விஜய் தேவரகொண்டா நடித்த Kingdom மகுடம் சூடியதா?
- இப்படத்தின் கதை 1991 ஆம் ஆண்டில் நடைப்பெறுகிறது.
- விஜய் தேவரகொண்டா கான்ஸ்டபுளாக வேலை பார்க்கிறார்.
கதைக்களம்
இப்படத்தின் கதை 1991 ஆம் ஆண்டில் நடைப்பெறுகிறது. விஜய் தேவரகொண்டா கான்ஸ்டபுளாக வேலை பார்க்கிறார். சிறு வயதில் இருந்தே அவரது அண்ணனை தேடி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அப்பொழுது விஜய் தேவரகொண்டாவை ஒரு பெரிய டிரக் மாஃபியா நடத்தும் ஒரு கும்பலில் அண்டர்கவர் ஸ்பையாக செல்ல கூறுகின்றனர். முதலில் இதற்கு விஜய் தேவரகொண்டா மறுக்கிறார். அதன்பின் அந்த கும்பலின் தலைவனாக இருப்பவர் இத்தனை வருடங்கள் இவர் தேடி வரும் அவரது அண்ணன் என தெரிய வருவதால் போலீஸ் கூறும் விஷயங்களுக்கு ஒப்புக்கொள்கிறார்.
இதனால் ஒரு கைதி போல் இலங்கைக்கு சென்று தன் அண்ணனின் கும்பலில் சேர்ந்துக் கொள்கிறார்.இதற்கு அடுத்து என்ன ஆனது இவரது அண்ணனை காப்பாற்றினாரா? இல்லை தன் கடமையை ஆற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
விஜய் தேவரகொண்டா இப்படத்தில் சூரி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறுவதை விட வாழ்ந்துள்ளார் என்றே கூற வேண்டும்.தன் அண்ணனை தேடி ஒரு ஸ்பை ஆக அவர் கூட்டத்திற்குள் சென்று, அவர் அண்ணனுக்கு தெரியாமல் விஷயத்தை தெரிந்துக்கொள்ள போராடும் தருணம் என அவரது கெரியர் பெஸ்ட் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்ணனாக நடித்துள்ள சத்ய தேவ் இவருக்கு இணையாக குறையாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்.
பாக்யஸ்ரீ கதாப்பாத்திரம் படத்தில் எதற்காக இருக்கிறது என தெளிவில்லாமல் இருந்தாலும அவரது பங்கை அழகாக வந்து அளவாக நடித்துள்ளார். வில்லன் கதாப்பாத்திரத்தில் முருகன் கவனம் ஈர்த்துள்ளார்.
இயக்கம்
இரண்டு எதிர்மறை துறைகளில் உள்ள அண்ணன் தம்பி கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் கவுதம் தின்னனுரி. படத்தின் முதல் பாதி நன்றாக செல்கிறது ஆனால் இரண்டாம் பாதி அப்படி இல்லாதது வருத்தம் அளிக்கிறது . இரண்டாம் பாதி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்திருக்க வேண்டும். சில இடங்களில் நம் பொறுமையை சோதிக்கிறது.
ஒளிப்பதிவு
கிரிஷ் கங்காதரன் மற்றும் ஜோமோன் டி ஜான் இருவரின் ஒளிப்பதிவும் மிகவும் எதார்த்தமாக படம்பிடித்து காட்டியுள்ளனர். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளனர்.
இசை
அனிருத் - இன் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம்.
தயாரிப்பு
சித்தாரா எண்டெர்டெயின்மண்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ரேட்டிங்- 3/5