OTT

தனுஷின் `குபேரா' பட ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
- சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியானது 'குபேரா' திரைப்படம்
- குபேரா திரைப்படம் இதுவரை 134 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது படத்தில் தனுஷின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
குபேரா திரைப்படம் இதுவரை 134 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது அதன்படி திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Next Story