OTT

மாமன் வருகிறார் - ஓடிடி ரிலீஸ் அப்டேட் கொடுத்த படக்குழு
- நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'.
- இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'. கடந்த மே 16 ஆம் தேதி இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கினார்.
இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் அமைந்தது. படம் வெளியாகி இதுவரை 45 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஓடிடி உரிமையை ஜீ5 நிறுவனம் வாங்கியுள்ளது. நீண்ட நாட்கள் ஆகியும் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை ஒருமனதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.