கர்நாடகா தேர்தல்

ஊட்டியில் 2-வது நாளாக இன்று துணை வேந்தர்கள் மாநாடு
- துணை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.
- நேற்று தொடங்கிய இந்த மாநாடானது இன்றுடன் நிறைவு பெறுகிறது.
ஊட்டி:
தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் வருடாந்திர மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
அந்த வகையில் 4-வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று தொடங்கியது. மாநாட்டை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
தேசிய கல்வி கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.
தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.
இன்று 2-வது நாளாக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.
இதில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்வி சார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, ஆராய்ச்சி சிறப்பு அம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் திறன் வளர்ச்சி, குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
நேற்று தொடங்கிய இந்த மாநாடானது இன்றுடன் நிறைவு பெறுகிறது.