என் மலர்

    உள்ளூர் செய்திகள் (District)

    மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து குறைந்தது
    X

    மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து குறைந்தது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது.
    • ஓரளவிற்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது.

    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தமிழகத்தில் முடிவுற்ற நிலையில் அவ்வப்போது கேரளா மற்றும் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த சாரல் மழையின் காரணமாக கடந்த வாரம் குற்றால அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    தற்போது மழைப் பொழிவு முழுவதுமாக குறைந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வருவதால் குற்றாலத்தின் பிரதான அருவிகளான மெயினருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் ஓரளவிற்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் அருவிகளில் பாறைகளை ஒட்டி மிதமாக விழும் குறைந்த அளவு தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குற்றால அருவிகளில் குளிக்க குவிந்திருந்தனர்.

    கேரளாவிலும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை நோக்கி கேரளா சுற்றுலாப் பயணிகள் படை யெடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×