என் மலர்

    உள்ளூர் செய்திகள் (District)

    குரும்பூர் அருகே தனியார் நிறுவன பஸ்சை கடத்திய வாலிபர் கைது
    X

    குரும்பூர் அருகே தனியார் நிறுவன பஸ்சை கடத்திய வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஸ்சை ஓட்டி வந்தவர் நிற்காமல் அவர்கள் மீது மோதி தப்பிச் சென்றுள்ளார்.
    • முத்தையாபுரம் போலீசார் அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    குரும்பூர்:

    தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருபவர் வைப்பார் கல்லூரணியை சேர்ந்த சேதுராஜ். இவர் தினமும் அந்த நிறுவனத்தில் இருந்து பணியாளர்களை பஸ் மூலம் அழைத்து செல்வது வழக்கம்.

    நேற்று காலை வழக்கம் போல் சேதுராஜ் தூத்துக்குடி நிறுவனத்தில் இருந்து பஸ்சை எடுத்துக் கொண்டு புறபட்டுள்ளார். முத்தையாபுரம் பகுதியில் வந்த போது பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் அந்த பஸ்சை கடத்தி சென்றுள்ளார்.

    உடனே டிரைவர் சேதுராஜ் இதுகுறித்து நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக முத்தையாபுரம் போலீசார் அனைத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் திருச்செந்தூர்-தூத்துக்குடி மெயின் ரோட்டில் அந்த பஸ் சென்றதாக கூறியதால் அதனை பிடிப்பதற்காக திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த காவலர் சந்தனகுமார் அந்த வழியாக வந்த வாழவல்லான் பகுதியை சேர்ந்த பால்ஐசக் அன்புராஜ் என்பவரது வாகனத்தில் சென்றுள்ளனர்.

    குரும்பூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த பஸ்சை, காவலர் சந்தனகுமார் நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அந்த பஸ்சை ஓட்டி வந்தவர் நிற்காமல் அவர்கள் மீது மோதி தப்பிச் சென்றுள்ளார்.

    இதில் காவலர் சந்தனகுமார், அவருடன் வந்த பால்ஐசக் அன்புராஜ் மற்றும் அந்த வழியாக வந்த கொழுவைநல்லூரை சேர்ந்த வின்சென்ட் ஆகிய 3 பேர் மீது மோதி சுமார் 30 மீட்டர் இழுத்துச் சென்றுள்ளது.

    இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த காவலர் சந்தனகுமாரும், வின்சென்டும் ஆத்தூர் சங்கர் மருத்துவமனையிலும், பால் ஐசக் அன்புராஜ் தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதில் பஸ்சை திருடி வந்த மர்மநபர் அதனை சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் பஸ்சை திருடியது மதுரை சேர்ந்த அழகுமணி என்பவரின் மகன் தமிழ்அன்பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    போலீசார் விரட்டி சென்று பிடித்தபோது தமிழ்அன்பனுக்கு கீழே விழுந்ததில் கை, கால்களில் காயம் ஏற்பட்டதில் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×