என் மலர்

    இந்தியா

    102 நாட்களில் ரூ.19 கோடி இழந்த பெண் மருத்துவர்.. பகீர் கிளப்பும் டிஜிட்டல் கைது மோசடி
    X

    102 நாட்களில் ரூ.19 கோடி இழந்த பெண் மருத்துவர்.. பகீர் கிளப்பும் 'டிஜிட்டல் கைது' மோசடி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மறுமுனையில் பேசிய பெண் தான் ஜோதி விஸ்வநாத், தொலைதொடர்பு துறையில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
    • நகைகள், சொத்துக்களை விற்று, ரூ.19.24 கோடி ரூபாயை மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.

    குஜராத்தின் அகமதாபாத்தில் மூத்த பெண் மருத்துவர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடியில் மூன்று மாதங்களில் (102 நாட்களில்) ரூ.19 கோடிக்கும் மேல் இழந்துள்ளார்.

    கடந்த மார்ச் மாதம் மருத்துவருக்கு போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் பேசிய பெண் தான் ஜோதி விஸ்வநாத், தொலைதொடர்பு துறையில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அவரை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர்கள் மற்றும் நோட்டரி அதிகாரிகள் கூறி பலர் பேசியுள்ளார்.

    மருத்துவர் பணமோசடி வழக்கில் சிக்கியுள்ளதாக நம்பவைத்துள்ளனர். போலி அமலாக்கத்துறை நோட்டீஸ்களை அனுப்பி, கைது செய்வோம் என தொடர்ந்து மிரட்டியுள்ளனர்.

    மருத்துவரின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு கேட்ட அவர்கள் கேட்ட விவரங்களை கொடுத்த பின்னர், பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை டெப்பாசிட் செய்யுமாறு கூறியுள்ளனர்.

    விசாரணை முடிந்த பிறகு பணம் திருப்பி அனுப்பப்படும் என்று அவர்கள் கூறியதை நம்பி மருத்துவரும் தனது நிலையான வைப்பு நிதிகளை உடைத்து, நகைகள், சொத்துக்களை விற்று, ரூ.19.24 கோடி ரூபாயை மோசடி கும்பலின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பணத்தை திருப்பித் தராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அவரின் புகாரின் அடிப்படையில் , சந்தேகத்தின் பேரில் லால்ஜி ஜெயந்திபாய் பல்தானியா என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்போடியா நாட்டை சேர்ந்த சைபர் கிரைம் கும்பலுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    Next Story
    ×