என் மலர்

    இந்தியா (National)

    சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு.. பாஜகவால் நிழலுலகாக மாறிய தலைநகர்.. டெல்லி குண்டுவெடிப்பு குறித்து அதிஷி
    X
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு.. பாஜகவால் நிழலுலகாக மாறிய தலைநகர்.. டெல்லி குண்டுவெடிப்பு குறித்து அதிஷி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது
    • பாஜகவுக்கு பணி செய்வதற்கான திறமையோ எண்ணமோ கிடையாது.

    தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் நேற்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசால் டெல்லியின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி முதல்வர் அதிஷி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிஆர்பிஎப் பள்ளி அருகில் நடந்த இந்த வெடிவிபத்து டெல்லியின் பாதுகாப்பு அமைப்பு சிதைந்துவருவதைக் காட்டுகிறது.

    டெல்லியின் சட்ட ஒழுங்கு மத்திய பா.ஜ.க. அரசின் கீழ் வருகிறது. ஆனால், பா.ஜ.க. அதை கவனிப்பதை விட்டுவிட்டு, டெல்லி அரசை முடக்குவதையே முழு நேர வேலையாக செய்து வருகிறது. மும்பையில் 1990 களில் இருந்த நிழல் உலகைப் போல் தற்போது டெல்லி உள்ளது.

    நகரத்தில் வெட்டவெளிச்சமாகத் துப்பாக்கிச்சூடும் வழிப்பறிகளும் நடக்கின்றன . பாஜகவுக்கு பணி செய்வதற்கான திறமையோ எண்ணமோ கிடையாது. டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்துவிட்டால் சட்ட ஒழுங்கை சீர்குலைத்ததை போல, பள்ளிகள், மருத்துவமனை என அனைத்து கட்டமைப்பையும் சிதைத்து விடுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

    இந்நிலையில் இந்த விமர்சனத்தால் கொந்தளித்த பாஜக அதிஷியை பொம்மை முதல்வர் என்று விமர்சித்துள்ளது. மேலும் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது முதலமைச்சர் குடியிருப்பில் அதிக செலவு செய்து பொருட்களை வாங்கியாக ஒரு லிஸ்டை வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×