இந்தியா

பிரபல நடிகை வீட்டில் லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் கொள்ளை
- வீட்டில் உள்ள பணிப் பெண் நகைகளை கொள்ளை அடித்து சென்று விட்டதாக புகாரில் கூறி இருக்கிறார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:
பிரபல நடிகையும் மாடல் அழகியுமாக இருப்பவர் நேகாமாலிக். சம்பவத்தன்று நேகாமாலிக் ஒரு விழாவுக்கு சென்றுவிட்டு தான் அணிந்திருந்த நகைகளை படுக்கை அறை டிராயரில் வைத்து உள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் நேகாமாலிக்கின் நகைகள் கொள்ளை போயிருப்பது அவருக்கு தெரிய வந்து உள்ளது. கடந்த 25-ந் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை நேகா வீட்டில் இருந்து படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அவரது தாயார் குருத்துவாரா சென்று உள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் உள்ள பணிப் பெண் நகைகளை கொள்ளை அடித்து சென்று விட்டதாக புகாரில் கூறி இருக்கிறார்.
இவர், 'காந்திபேர்', ஆ'க'யா, 'முசாபிர் பிங்கி' 'மோக வாலி' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
Next Story