என் மலர்

    இந்தியா

    முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மறைவு
    X

    முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மறைவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மும்பை குண்டுவெடிப்பின்போது அதற்கு பொறுப்பேற்று தனது பதவியைத் துறந்து புகழ் பெற்றார்.
    • தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான சிவராஜ் பாட்டீல் (90) காலமானார்.

    வயது மூப்பு மற்றும் உடல்குறைவு காரணமாக நீண்ட காலமாக மகாராஷ்டிராவின் லத்தூரில் வீட்டு பராமரிப்பில் இருந்த அவர், இன்று காலை 6.30 மணியளவில் காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார் சிவராஜ் பாட்டீல்.

    மும்பை குண்டுவெடிப்பின்போது அதற்கு பொறுப்பேற்று தனது பதவியைத் துறந்து புகழ் பெற்றார்.

    1980 ஆம் ஆண்டு முதல் முறையாக லத்தூரில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் தேசிய அரசியலில் நுழைந்தார். தொடர்ச்சியாக ஏழு முறை அதே இடத்திலிருந்து எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    அன்றிலிருந்து 1999 வரை, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்களில் பாதுகாப்பு, வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து போன்ற பல முக்கிய துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார்.

    Next Story
    ×