என் மலர்

    இந்தியா

    மாரடைப்பு.. சாலையில் துடிதுடித்த கணவர் - கைகூப்பி கெஞ்சிய மனைவி -  மரித்த மனிதநேயம் -  வீடியோ
    X

    மாரடைப்பு.. சாலையில் துடிதுடித்த கணவர் - கைகூப்பி கெஞ்சிய மனைவி - மரித்த மனிதநேயம் - வீடியோ

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெங்கடரமணன் சாலையில் விழுந்து வலியால் துடித்தார். அவரது மனைவி கைகூப்பியவாறு சாலையில் சென்வர்களிடம் உதவிக்காக கெஞ்சினார்.
    • சக மனிதர்களால் கைவிடப்பட்டபோதும் மனித நேயத்தின் மீது நம்பிக்கை இழக்காத குடும்பத்தினர் வெங்கடரமணன் கண்களை தானமாக வழங்கினர்.

    கர்நாடக மாநிலம் பெண்களூருவில் மனிதர்கள்களின் அலட்சியத்தால் சக மனிதர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பெங்களூரு பாலாஜி நகரில் வசித்த மெக்கானிக்காக வெங்கடரமணன் (34) நேற்று அதிகாலை 3:30 மணிக்கு கடுமையான மார்பு வலியை உணர்ந்தார்.

    உடனடியாக அவரது மனைவி, தனது கணவரை பைக்கில் ஏற்றி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், மருத்துவர்கள் இல்லாததால் அங்கிருந்த ஊழியர்கள் அவரை திருப்பி அனுப்பினர்.

    அவர் வேறொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு ஒரு ஈசிஜி எடுக்கப்பட்டு, அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இருப்பினும், அவசர சிகிச்சை அளிக்கவோ அல்லது ஆம்புலன்ஸ் கூட ஏற்பாடு செய்யாமல், ஜெயநகரில் உள்ள ஸ்ரீ ஜெயதேவா இருதய அறிவியல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    தம்பதியினர் மீண்டும் தங்கள் பைக்கில் புறப்பட்டனர். வழியில், அவர்களின் பைக் விபத்துக்குள்ளானது.

    இதனால், வெங்கடரமணன் சாலையில் விழுந்து வலியால் துடித்தார். அந்த நேரத்தில், அவரது மனைவி கைகூப்பியவாறு சாலையில் சென்ற வாகனத்தில் சென்ற ஒவ்வொருவரிடமும் உதவிக்காக கெஞ்சினார்.

    சிசிடிவி காட்சிகளின்படி, அந்த நேரத்தில் அவ்வழியே சென்ற கார்கள் மற்றும் பைக்குகள் எதுவும் நிற்காமல் சென்றுவிட்டன.

    சிறிது நேரம் கழித்து, ஒரு டாக்ஸி ஓட்டுநர் நிறுத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினார். ஆனால், ஏற்கனவே தாமதமாகிவிட்டது. அவர்கள் மருத்துவமனையை அடைந்தபோது, வெங்கடரமணன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இறந்தவருக்கு ஐந்து வயது மகனும் 18 மாத மகளும் உள்ளனர்.

    சக மனிதர்களால் கைவிடப்பட்டபோதும் மனித நேயத்தின் மீது நம்பிக்கை இழக்காத குடும்பத்தினர் வெங்கடரமணன் கண்களை தானமாக வழங்கினர்.

    Next Story
    ×