என் மலர்

    இந்தியா

    சுரங்க விபத்தில் உயிரிழப்பு..  இறுதிச் சடங்கு முடிந்த பின் உயிருடன் வந்த நபர்!
    X

    சுரங்க விபத்தில் 'உயிரிழப்பு'.. இறுதிச் சடங்கு முடிந்த பின் உயிருடன் வந்த நபர்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிலக்கரி சுரங்கத்தில் டைனமைட் வெடித்த விபத்தில் 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • அசாம் மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தை சேர்ந்தவர் 44 வயது ஷியாம் பாபு சின்ஹா.

    மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா ஹில்ஸ் பகுதியில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி டைனமைட் வெடிபொருள் வெடித்த விபத்தில் 31 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் அசாம் மாநிலம் ஸ்ரீபூமி மாவட்டத்தை சேர்ந்த 44 வயது ஷியாம் பாபு சின்ஹா உயிரிழந்ததாக கருதப்பட்டது.

    அவரது குடும்பத்தினரும் விபத்தில் சிதைந்திருந்த ஒரு சடலத்தை அடையாளம் கண்டு, அதைத் ஷியாம் பாபு சின்ஹா என்று கருதி சொந்த ஊருக்குக் கொண்டு சென்று இறுதிச்சடங்குகளைச் செய்தனர்.

    குடும்பத்தினரும் உறவினர்களும் துக்கத்தில் இருந்த நிலையில் ஷியாம் பாபு சின்ஹா திடீரென வீட்டிற்கு வந்துள்ளார்.

    அவரை பார்த்து அனைவரும் முதலில் அச்சமடைந்தாலும், பின்னர் அவர் உயிருடன் இருப்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

    இந்தக் குழப்பத்திற்கு சடலத்தை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறுதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

    ஷியாம் பாபுவின் பெயரில் யாருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    Next Story
    ×