என் மலர்

    இந்தியா

    மேகாலயா நிலக்கரி சுரங்க வெடி விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
    X

    மேகாலயா நிலக்கரி சுரங்க வெடி விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
    • இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    ஷில்லாங்:

    வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டத்தில் தஷ்காய் என்ற பகுதியில் சட்டவிரோதமாக நிலக்கரிச் சுரங்கம் இயங்கி வந்தது.

    இந்த நிலக்கரிச் சுரங்கத்தில் நேற்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியை மாநில நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்தார்.

    மத்திய அரசு சார்பில் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டது. மேகாலயா முதல் மந்திரி கான்ராட் சங்மா இரங்கலை தெரிவித்ததுடன், மாநில அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் அறிவிக்கப்பட்டது.

    Next Story
    ×