என் மலர்

    இந்தியா

    ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமா் மோடி டெலிபோனில் பேச்சு
    X

    ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமா் மோடி டெலிபோனில் பேச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யுஇஏ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.
    • மேலும், தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

    புதுடெல்லி:

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் ஸயத் அல்நஹ்யானிடம் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினாா்.

    அப்போது யுஇஏ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தக் கடினமான சூழலில் யுஏஇயுடன் இந்தியா துணை நிற்கிறது. அங்கு வசிக்கும் இந்தியா்களுக்கு பாதுகாப்பு அளித்து வருவதற்கு நன்றி. மோதலை கைவிட்டு, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இந்தியா ஆதரவு அளிக்கும் என பதிவிட்டுள்ளா.

    Next Story
    ×