கிரிக்கெட் (Cricket)

ரச்சின் ரவீந்திரா அசத்தல்: சொந்த மண்ணில் இலங்கையை நசுக்கியது நியூசிலாந்து
- முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 168 ரன்கள் எடுத்தது.
- மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பை தொடரின் 46-வது லீக் ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரின் பிரேமதாசா மைதானத்தில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. கேப்டன் மிட்செல் சான்ட்னர் 26 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 32 ரன்னும், மெக்கன்சி 31 ரன்னும் எடுத்தனர்.
இலங்கை சார்பில் தீட்சனா, சமீரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. கமிந்து மெண்டிஸ் 31 ரன்னும், வெல்லாலகே 29 ரன்னும் எடுத்தனர்.
இதன்மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.
நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவீந்திரா 4 விக்கெட்டும், மேட் ஹென்றி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.





