என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    36 ஆண்டுக்கு பிறகு வெற்றி பெற்றது பெருமைமிக்க தருணம்- டாம் லாதம் நெகிழ்ச்சி
    X

    36 ஆண்டுக்கு பிறகு வெற்றி பெற்றது பெருமைமிக்க தருணம்- டாம் லாதம் நெகிழ்ச்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 36 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்டில் வெற்றி பெற்றது சிறப்பு வாய்ந்த உணர்வை தருகிறது.
    • அணி வீரர்களுக்கு இது பெருமைமிக்க தருணம்.

    பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவை அதன் சொந்த மண்ணிலேயே 36 ஆண்டுக்கு பிறகு வீழ்த்தி வரலாறு படைத்தது.

    இது குறித்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறுகையில்:-

    36 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்டில் வெற்றி பெற்றது சிறப்பு வாய்ந்த உணர்வை தருகிறது. அணி வீரர்களுக்கு இது பெருமைமிக்க தருணம். இந்த வெற்றியை நாங்கள் கொண்டாடுவோம். அதே சமயம் இந்தியாவுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் கடும் சவாலாக இருக்கும் என்பதை அறிவோம். இந்திய அணியில் ஆற்றல் மிக்க வீரர்கள் நிறைய பேர் உள்ளனர்.

    முதல் இன்னிங்சில் ஒரு கட்டத்தில் ஆட்டம் கொஞ்சம் சமநிலையில் இருந்தது. 8-வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திராவும், டிம் சவுதியும் இணைந்து திரட்டிய 137 ரன்களே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடாத வில்லியம்சன் அடுத்த டெஸ்டுக்கு திரும்புவாரா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஓரிரு நாட்களில் அது தெளிவாகி விடும்' என்றார்.

    Next Story
    ×