விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் லக்ஷயா சென் அதிர்ச்சி தோல்வி
- தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
- இந்திய வீரர் பிரியான்ஷு ரஜாவத் முதல் சுற்றில் இந்தோனேசிய வீரரிடம் தோல்வி அடைந்தார்.
பாங்காக்:
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், அயர்லாந்தின் நாட் நூயென் உடன் மோதினார்.
இதில் லக்ஷயா சென் 19-21, 21-9, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது.
மற்றொரு போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷு ரஜாவத், இந்தோனேசிய வீரரிடம் தோல்வி அடைந்தார்.
Next Story