தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது- எடப்பாடி பழனிசாமி
- 2026-ல் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.
- கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள்.
புதுக்கோட்டை:
தி.மு.கவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக என்ற அ.தி.மு.க. வின் புதிய பிரசார திட்டங்களை புதுக்கோட்டையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் பதில் சொல்லுங்க அப்பா என்ற தலைப்பில் பெண்களின் பாதிப்புகள் குறித்த காணொலியையும் வெளியிட்டார்.
தி.மு.க. அளித்த வாக்குறுதிகளின் உண்மை நிலையை அறிய மக்களுக்கு ரிப்போர்ட் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்து தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக சென்று மக்களிடம் கொடுக்கப்பட உள்ள ரிப்போர்ட் கார்டையும் வெளியிட்டார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
* 2026-ல் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.
* தி.மு.க. ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது.
* நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல.
* அ.தி.மு.க கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வரவேண்டுமோ அப்போது வரும்.
* கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்கிறார்கள்.
* தி.மு.க.வினர் சென்று பிரதமரின் வீட்டு கதவை தட்டினால் மட்டும் சரியா? என்றார்.