தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.
- கடந்த இரு தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகவே நீடித்து வந்தது.
ஒகேனக்கல்:
கர்நாடகா தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும் கர்நாடகா அணைகளில் இருந்து அவ்வப்போது திறந்து விடப்படும் நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது.
இந்நிலையில் சில தினங்களாக நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி வரை அதிகரித்த நிலையில் கடந்த இரு தினங்களாக நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாகவே நீடித்து வந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Next Story