தமிழ்நாடு செய்திகள்

கும்பகோணம், ஒரத்தநாடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- ஒரத்தநாடு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே சாக்கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை 13ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கும்பகோணம் நகரம் தவிர உமாமகேஸ்வரபுரம், கோசிமணி நகர், தாராசுரம், எலுமிச்சங்காபாளையம், அரியத்திடல், அண்ணலக்ரஹாரம், திப்பிராஜபுரம், விசலூர், சிவபுரம், உடையாளூர், சுந்தரபெருமாள் கோவில், நாச்சியார் கோவில், பட்டீஸ்வரம், வலங்கைமான், ஆலங்குடி, திருநீலக்குடி, எஸ்.புதூர், அவணியாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழக கும்பகோணம் நகர் உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஒரத்தநாடு துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காைல 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரத்தநாடு, கண்ணந்தன்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன்குடிக்காடு, தென்னமநாடு, பருத்திகோட்டை, பொய்யுண்டார்குடிக்காடு, கோயிலூர், ஆயங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழக ஒரத்தநாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.