தமிழ்நாடு செய்திகள்

கேப்டன் கூட யாரையும் கம்பேர் பண்ணக்கூடாது - விஜய் கட் அவுட் குறித்து பேசிய பிரேமலதா
- களத்தில் இறங்கி மக்களுக்கு பணி செய்கின்ற ஒரு உத்தமராகதான் கேப்டன் வாழ்ந்தார்.
- ஆம்புலன்ஸ் வரும், லைட் ஆஃப் பண்ணிடுவாங்க, நிறைய பிரச்சனை இருக்கு.
மயிலாடுதுறையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பேனர் வைத்தது, கேப்டன் அரசியல் பாணியை விஜய் பாலோ செய்கிறாரா என்பது குறித்து அவங்ககிட்ட தான் கேட்க வேண்டும். கேப்டன் மக்களுக்கான தலைவர். களத்தில் இறங்கி மக்களுக்கு பணி செய்கின்ற ஒரு உத்தமராகதான் கேப்டன் வாழ்ந்தார். சம்பாதித்தது அத்தனையையும் மக்களுக்கு உதவி செய்த ஒரு தலைவர் கேப்டன். கேப்டன் கூட யாரையும் கம்பேர் பண்ணக்கூடாது. கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான்.
ஆம்புலன்ஸ் வரும், லைட் ஆஃப் பண்ணிடுவாங்க, நிறைய பிரச்சனை இருக்கு. இந்த பிரச்சனையை 20 வருடங்களாக பார்த்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story