தமிழ்நாடு செய்திகள்

துணை ஜனாதிபதி வேட்பாளர்: தமிழர் வெற்றி பெற்றால் தமிழர்களுக்கு பெருமை- பிரேமலதா விஜயகாந்த்
- விருத்தாச்சலம் தே.மு.தி.க.வுக்கு முதல் வெற்றியை கொடுத்த தொகுதி.
- யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதி, எத்தனை சீட், எந்தந்த தொகுதி, யார் வேட்பாளர் என்று எல்லாம் நான் இப்போது சொல்ல முடியாது.
மயிலாடுதுறையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2026 ஜனவரியில் 9-ந்தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
* விருத்தாச்சலம் தே.மு.தி.க.வுக்கு முதல் வெற்றியை கொடுத்த தொகுதி. யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதி, எத்தனை சீட், எந்தந்த தொகுதி, யார் வேட்பாளர் என்று எல்லாம் நான் இப்போது சொல்ல முடியாது. ஜனவரியில் சொல்கிறேன்.
* ஒரே ஓட்டலில் திருமாவளவனும் தங்கியிருந்ததாலும், அன்று அவருக்கு பிறந்தநாள் என்பதாலும் சுதீஷ் சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு, அவரின் சின்னம்மா இறந்ததற்கு ஆறுதல் தெரிவித்தார்.
* NDA சார்பாக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழர் ஒருவர் வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் பெருமை. 2 ஜனாதிபதிகள் நம் தமிழ்நாட்டில் இருந்து உள்ளார்கள். துணை ஜனாதிபதிக்கு ஒரு தமிழருக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நிச்சயம் ஒன்றாக இணைந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் இது தமிழ்நாட்டுக்கும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த பெருமையாக இருக்கும். பொறுத்து இருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.