தமிழ்நாடு செய்திகள்

தந்தையை மிஞ்சிய தனயன் இருக்க கூடாது... ராஜேந்திர சோழனே அதற்கு உதாரணம் - ராமதாஸ்
- மகளிர் மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
- கஞ்சா, மது என்ற தீமை ஒழிய வேண்டும்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் மகளிர் பெருவிழா மாநாடு பறை, தவில் இசையுடன் தொடங்கியது
இந்த மாநாட்டிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பெண்களுக்கு பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பூரண மதுவிலக்கு என பாமக மகளிர் மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. மாநாட்டில் ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார்.
இந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ், "பெண்கள் இல்லாமல் நாம் இல்லை. உலகமே இல்லை; பெண்களுக்கு காக்கும் சக்தி உள்ளது. பெண்கள் எல்லா வகையிலும் முன்னேற வழிகாட்டுவதற்கே இந்த மாநாடு.
கஞ்சா, மது என்ற தீமை ஒழிய வேண்டும். அதை செய்வது பெரிய காரியம் இல்லை. 10 அதிகாரிகளை என்னிடம் அனுப்புங்கள். நான் சொல்வதை அவர்கள் கேட்டால் சமூக தீமை ஒழிக்கப்படும். பெண்களை விட ஆண்கள் பின்னால் இருப்பதற்கு இந்த இரு தீமைகள்தான் காரணம்.
தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது. அதற்கு உதாரணம் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன். கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பெரியகோவிலை விஞ்சிடக் கூடாது என ராஜேந்திரன் நினைத்ததே இதற்கு உதாரணம்" என்று தெரிவித்தார்.