தமிழ்நாடு செய்திகள்

பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை- வேலூர் கல்லூரி துணை முதல்வர் கைது
- வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்பழகனை தேடி வந்தனர்.
- கைது செய்யப்பட்ட அன்பழகனிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூரில் உள்ள ஊரீசு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன். இவர் அதே கல்லூரியில் பணியாற்றி வந்த பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்பழகனை தேடி வந்தனர்.
கல்லூரி மாணவ, மாணவிகள் அன்பழகனுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து அன்பழகனை கைது செய்ய கோரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம், ராசன பள்ளியில் பதுங்கி இருந்த அன்பழகனை இன்று அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அன்பழகனிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story