உலகம்

52,000 பேருக்கெல்லாம் தர முடியாது.. 10,000 இந்திய இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஹஜ் விசா - சவுதி அரசு
- 52,000 தங்குமிட ஒதுக்கீடுகளை ரத்து செய்து, அவற்றை இதர நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது.
- முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர், மத்திய அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாத்தை பின்பற்றும் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுகிறார்கள்.
இந்நிலையில் இந்த வருடம் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சேவை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 52,000 தங்குமிட ஒதுக்கீடுகளை ரத்து செய்து, அவற்றை இதர நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனால் இந்தியாவிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 52,000 ஹஜ் பயணிகளின் புனித கடமை கேள்விக்குறியானது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர், மத்திய அரசு இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் மத்திய அரசின் வற்புறுத்தலை அடுத்து 10,000 இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஹஜ் விசா வழங்க சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.