என் மலர்

    உலகம்

    கோழைத்தனமாக தாக்கிய இஸ்ரேல் - கத்தார் ஆவேசம்.. ஈரான் என்ன சொல்கிறது?
    X

    கோழைத்தனமாக தாக்கிய இஸ்ரேல் - கத்தார் ஆவேசம்.. ஈரான் என்ன சொல்கிறது?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
    • இந்த குற்றம் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும்

    கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தலைமையகம் செயல்பட்டு வருகிறது.

    காசா போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை குறித்து கத்தார் அரசு மூலம் இஸ்ரேலிடம் அங்கிருந்தபடி ஹமாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் தோஹாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்துக்கு கத்தார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி தெரிவித்தார்.தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலை கத்தார் கடுமையாகக் கண்டிக்கிறது.

    அவர் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை கோழைத்தனமானது. கத்தாரின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை குறிவைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் பொறுத்துக்கொள்ளப்படாது.

    இந்த குற்றம் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும். இது கத்தாரின் குடிமக்கள் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    பிராந்தியத்தின் பாதுகாப்பை தொடர்ந்து குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இஸ்ரேலின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இஸ்ரேலின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை ஆபத்தான முறையில் மீறுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பக்காய் தெரிவித்துள்ளார்.

    அவ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இது மிகவும் ஆபத்தானது. இந்தக் குற்றச் செயல் அனைத்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறுவதாகும். கத்தாரின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும் உள்ளது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×